AI மனிதரின் வேலை உலகை மாற்றும் புதிய புரட்சி
மனிதரின் வேலை உலகை மாற்றும் புதிய புரட்சி              நம் உலகம் ஒரு புதிய மாற்றத்திற்குள் நுழைந்திருக்கிறது. அதுதான் செயற்கை நுண்ணறிவு — Artificial Intelligence . இன்று அது ஒரு தொழில்நுட்ப வார்த்தை மட்டுமல்ல; நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் தொடந்துவிட்டது. இன்று Google, Chatbots , Mobile Apps , Hospital Machines , Online Banking  — எல்லாம் AI வழி இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த தொழில்நுட்பம் உண்மையில் நமக்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? இது நமக்கு உதவுகிறதா? அல்லது நம்ம வேலைகளைப் பறிக்கிறதா? இதுதான் இன்றைய உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான கேள்வி.  முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளையின் சிந்தனையைப் போல செயல்படும் ஒரு கணினி திறன். அதாவது ஒரு இயந்திரம் “ என்ன செய்ய வேண்டும் ” என்று சொல்லாமல், தானாக முடிவு எடுக்கும் திறன் பெறுவது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது கற்பனையாக இருந்தது. ஆனால் இன்று அது நிஜம்.  உதாரணமாக, நாம் ஆன்லைனில் ஒரு பொருள் தேடினால், அதற்கேற்ற பொருட்கள் நமக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தால், அதே மாதிரி இ...