✝️ALL SOUL'S DAY✝️
இன்று நாம் அனைவரும் இறந்தவர்களின் ஆன்மாக்களின் நினைவு நாளாக கொண்டாடுகின்றோம். இவ்வுலகில் நம்மோடு வாழ்ந்து மரித்த நம் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், கணவன்,மனைவி, பிள்ளைகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இவ்வுலகில் இருக்கும் பொழுது அனைத்து விதமான திருநாளையும் கொண்டாடி இருப்பார்கள், ஆனால் இன்று அவர்களுகே திருநாளாக அமைகிறது. இன்று மட்டுமே அவர்களை நினைக்க வேண்டிய நாளாகவும், அவர்களின் கல்லறைகளுக்கு செல்லுகின்ற நாளாகவும் இருக்கிறது. ஆனால் அவர்களை நாம் அவ்வப்பொழுது மறந்துவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை.
இறந்து போன அனைவருமே நிலை வாழ்வில் நுழைந்தார்கள் என கடவுளைத் தவிர நாம் அறிய இயலாது. அவர்களும் ஏராளமான ஆன்மாக்கள் உத்தரிப்பு ஸ்தலத்தில் இருக்கக்கூடும்.
(இதுவே அவர்களின் கூக்குரலும் கெஞ்சலும்)
என் அன்பார்ந்தவர்களே, என் உற்றார் உறவினர்களே,
நான் பெற்ற செல்வங்களே, நான் பூவுலகில் இறந்தவுடன்
கதறிக் கதறி அழுதவர்களே
என்னைக் கல்லறையில் அடக்கம்
பண்ண வந்தவர்களே
என்னை ஏன் பின்பு
மறந்துவிட்டீர்கள்?
ஏன் என் கல்லறைக்கு முதலாய்
வருவதில்லை?
ஏன் என்னை நினைத்து
பலிபூசை முதலாய் கொடுப்பதில்லை
ஏன் என்னை நினைத்து
தான, தர்மங்கள் முதலாய் செய்ய
மறந்துவிட்டீர்கள்
ஏன் என்னை முழுவதும்
மறந்துவிட்டீர்கள்
நீங்கள் என்னை மறக்கலாம்
எப்போது நான் உங்களை மறந்தேன்?
உங்களை ஒருபோதும் மறவாத
மனம் என்னுடையது.
கத்தோலிக்கர்கள் ஆகிய நாம் உத்தரிப்பு ஸ்தலத்தை மிகவும் அறிந்திருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு அதைப்பற்றி தெரியாமல் இருப்பதே மிகுந்த வேதனை அளிக்கிறது. அச் ஸ்தலத்தில் நமக்கான உறவு அணையாத நெருப்பில் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை நினைத்து, அவர்களுக்காக ஏராளமான ஜெபங்களும், பூசைகளும், மற்றவர்களுக்கு உதவியும் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு நாம் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்?
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆன்மாக்களின் குரல்"என்மீது இரக்கமாயிருங்கள், நண்பர்களே. நீங்களாவது என்மீது இரக்கமாயிருங்கள். ஏனெனில் ஆண்டவரின் கரம் என் மேல் வலிமையாக உள்ளது."
நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் நம் ஆண்டவரிடம் கேட்போம், ஆனால் அவர்கள் அச்சிறையிலிருந்து யாரிடம் கேட்பார்கள்? நாம் ஒவ்வொருவருமே அவர்களின் ஆன்ம மீப்புக்காக கடமைப்பட்டிருக்கின்றோம்,அது நம் அவசியமாக கொண்டிருக்கிறது. அவர்களின் மீட்பு நம் முயற்சியில் மட்டுமே இருக்கிறது ,அவர்களை மறந்து விடுவது அநீதி ஆகும்.
கடவுளின் தாயாகிய மரியாளும் இத்திட்டத்தில் பங்கு கொள்வோருக்கு மிகுந்த பக்கத்துணையாய் இருப்பார். இவ்விடத்திலும் நாம் அனைவரின் சார்பாக அவ்ஆன்மாக்காக பரிந்து பேசுபவரும் அவரே. அவ்ஆன்மாக்களும் மீட்பு பெறும் பொழுது நமக்கு கைமாறு செய்வார்கள்.
அவர்களுக்காக நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள்:
(அ) நம்மால் முடிந்த அனைத்து வகையான தானங்களை செய்வோம்.
(ஆ) நம் வசதிக்குத் தக்கவாறு பலி பூசைகள்
ஒப்புக் கொடுப்போம். (இ) நம்மால் இயன்ற அளவு பலி பூசைகளில் பங்கேற்போம்.
(ஈ) நம்முடைய அனைத்து வேதனைகளையும், துன்பங்களையும் உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீட்பிற்காக ஒப்புக் கொடுப்போம்.
இத்தகைய முயற்சிகளால் எண்ணற்ற ஆன்மாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டு, பத்தாயிரம் மடங்கு பலன்களைத் திரும்ப கைம்மாறாக பெறுவோம்.
அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஜெபம்.
{{{ "நித்திய பிதாவே, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டதும். இனி நிறைவேற்றப்பட்ட இருக்கின்றவையுமான சகல பலி பூசைகளோடும் சேர்ந்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன்"}}}
உங்களுடைய 24 மணி நேரத்தில் ஒரு நிமிடம் இவர்களுக்காக செலவிடலாமே!
Comments
Post a Comment