"நீ செலவிட்ட நேரம்"

அன்று ஒரு விடுமுறை நாள், தன் மகனை விளையாட வைப்பதற்காக, ஒரு தந்தை தன் மகனை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வந்தார். அவர் தன் மகனிடம், ஜோ, பார்த்து கவனமாக விளையாட வேண்டும், என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு கல்மேசையின் மீது அமர்ந்தார். அவன் சிறிது நேரம் விளையாடிவிட்டு,

 தன் அப்பாவிடம் வந்து, அப்பா, நாம் பதநீர் அருந்த செல்வோமா ? என்று கேட்டான். அவன் தந்தையும் சரி என பதில் அளித்தார்.பின்பு பதநீர் அருந்தியவுடன்,
 

அப்பா, கோவிலுக்கு செல்வோமா? என்று கேட்டான். அதற்கும் அவர் தந்தை சரி என பதில் அளித்தார். கோவிலில் ஜெபித்து விட்டு வெளியே வரும் பொழுது, 

அப்பா, கடல் கரையோரம் சிறிது நேரம் நடப்போமா? என்று கேட்டான். அதற்கும் அவன் தந்தை சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.



பிறகு வீட்டிற்கு வரும் பொழுது, இவ்ளோ நேரம் எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்? என தன் அம்மா கேட்க, தான் சுற்றி வந்த அனைத்து இடங்களையும் தன் அம்மாவிடம் சொன்னான். பிறகு அவள் தன் கணவரிடம், எதற்காக இவ்வளவு நேரம்  வெளியே செலவிட்டீர்கள்? என்று கேட்டாள்.

அதற்கு அவளின் கணவன், நான், நம் மகன் வயதில் இருக்கும் பொழுது என் அப்பாவிடம், என் மகன் இன்று என்னிடம் கேட்ட அனைத்தையும், நானும் என் அப்பாவிடம் அன்று கேட்டேன். ஆனால் அவர் அனைத்தையும் மறுத்து விட்டார். அவர் என்னுடன் எங்கேயும் வந்ததில்லை. அவருடைய நேரத்தையும் எனக்காக செலவிட்டதில்லை. அதற்கான வலியை அப்போது நான் உணர்ந்தேன். என் தந்தை எனக்கு கொடுக்காததை நான் என் பிள்ளைக்கு கொடுக்கிறேன். என் அப்பா எனக்கு செய்த தவறை, நான் என் பிள்ளையிடம் செய்ய மாட்டேன், என்று கூறினான்.


அவனின் மனைவியோ, நீங்கள் என் கணவராக இருப்பதை காட்டிலும், நம் மகனுக்கு நல்ல தந்தையாகவும், பொறுமையுள்ள தந்தையாகும் இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றாள்.

 ' பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
                               -இயேசு கிறிஸ்து

இதை நீங்கள் கதையாக நினைக்கலாம் ஆனால் இது இன்று வரை சமீபத்தில் உள்ளது. ஒரு  தாயாகவும் தந்தையாகவோ, சகோதரனாகவோ சகோதரியாகவோ, கணவனாகவோ மனைவியாகவோ, இருந்து, தான் கடமைப்பட்டிருக்கும் நெருங்கிய உறவுகளுடன் செலவழிக்க நேரங்களில் இருந்தும், அந்நேரத்தை கொடுக்காமல் இருப்பது அவர்களுக்கு  மிகுந்த காயத்தையே உண்டாக்கும். இந்த தந்தைக்கு கிடைத்தது போல.

நம் நேரத்தை பிறகு கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள் அதற்கு காலம் சம்மதிக்காது. உங்கள் நேரங்களோ வெளியேற்றம் பெற்றவை, அதை திரும்ப பெற இயலாது. அது உன்னுடன் இருக்கும் பொழுதே நீ, (நீ விரும்பியவர்களுடன்) இரு.








Comments

Popular posts from this blog

மறந்துபோன கடிதம்

நம்பிக்கை

ஒரு மாலை உலா