THE HUMAN'S SIN


முதன் முதலில் ஆதாம் மற்றும் ஏவாளின் வழியாக பாவம் இவ்உலகில் தோன்றியதது. ஆனால் அவர்களின் வழியாகவே பல புனிதர்கள் தோன்றினார்கள் என்பது உண்மை. 

இன்றைய காலகட்டத்தில் நாம் நம் வாழ்க்கையை பாவத்தோடே சேர்ந்து வாழ்ந்து வருகிறோம் ,அது நம் இயற்கையாகவே மாறிவிடுகிறது ஆனால், ஒரு மனிதர் தம் இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறும் பொழுது தான் அது பாவமாக மாறுகிறது ,ஏனெனில் கடவுள் நம் அனைவரையும் அவர் சாயலில் படைத்தார் , கடவுளின் இயல்பு நாம் அனைவருக்கும் உண்டு ஆகவேதான் புனிதராகும் வாய்ப்பு நாம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது .

முன்மதியுடையோர், தான் அணையாத நெருப்புக்குள் புகாதவாறு, தான் செய்த பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பார், ஏனெனில் நொறுங்கிய நெஞ்சமே கடவுளுக்கு ஏற்ற பலி  என நாம் அறிவோம். கடவுளிடமிருந்து நமக்கு ஒரு சட்டம் உண்டு அச்சட்டத்தை மீறுவது பாவமாகும்.

பாவம்  நம்மிடம் இல்லையென்று நினைத்தால் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.

ஒருவேளை சினமுற்று பாவம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் காத்திருங்கள், பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணிந்துவிடக்கூடும்.

பாவம் செய்ய சிந்தனை தூண்டுமாயின், வானத்தூதரை அழையுங்கள் அவர் வழியாக தவறான சிந்தனை சிதறடிக்கப்படும்.

தந்தையிடமே பரிந்து பேச ஒருவர் உள்ளார் அவரே இயேசு கிறிஸ்து. நம் இக்கட்டான சூழ்நிலைகளுக்காக அவரிடம் மன்றாடுவதே விடுதலை அளிக்கும்.

நம்மால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது ஆனால் பாவத்திலிருந்து மீள்வதே புனிதமாகும்.

ஒரு வார்த்தையை நம் மனதில் வைப்பது அவசியமாகும், 

"ஒருவர் தான் செய்வது பாவம் என்பதை அறிந்தும் மீண்டும் மீண்டும் அப்பாவத்தை செய்வது இயேசு கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அரைப்பதற்கு சமம்."


உண்மையை அறிந்த பின்னரும், வேண்டு மென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி தமக்கு வேறு எந்தப் பாவம் போக்கும் பலியும் இராது மாறாக, அச்சத்தோடு நாம் எதிர்பார்த் திருக்கும் தீர்ப்பும், பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும்.(எபிரேயர் 10:26-27)


Comments

Popular posts from this blog

மறந்துபோன கடிதம்

நம்பிக்கை

ஒரு மாலை உலா