படைப்பின் அர்த்தங்கள்

  இயற்கை காட்டிய விளக்கம்

ஒவ்வொரு நாளும் விடியற்காலையில்  பெண் ஒருவர் புல்வெளியில் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள், இயற்கையை மிகவும் நேசித்தால், அதனுடன் தியானம் செய்வதும் அவளுக்கு வழக்கம். அவள் அனைத்தையும்  ரசித்திருந்தபோது, ​​ஒரு மெல்லிய கொடியில் பூசணிக்காயைக் கண்டாள். அதே நேரத்தில் வயலின் மூலையில் ஒரு கம்பீரமான, பெரிய ஆலமரம் நின்றிருந்ததையும் கண்டாள்.

அவள்  அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து இயற்கையின் விசித்திரமான திருப்பங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள், அந்த ஆலமரத்தின் பெரிய கிளைகளில் சிறிய காய்களையும்,சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காயையும் வைத்ததென்ன முறை? என்று கடவுளை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.


 "கடவுள் படைப்பில் சற்று தவறு செய்துவிட்டார் போல!  சின்னஞ்சிறு கொடிகளில் சிறிய கனிகளையும், பெரிய கிளைகளில் பெரிய கனிகளையும் தானே வைத்திருக்க வேண்டும். இது என்ன திருப்பம், தலைகீழாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை." என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

அதனதன் பெற்ற வரம் அவ்வாறு போல என்று அந்த ஆலமரத்தடியிலேயே  தலைசாய்த்து இமை மூடினாள். அவள் தூங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் மூக்கில்  ஒரு சிறிய ஆலமரத்தின் கனி விழுந்தது. அவள் திடீரென்று துள்ளி எழுந்தாள். அந்த ஆலமரத்தின் கனியை தன் கையில் எடுத்து, வானத்தை அண்ணார்ந்து பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு, மூக்கைத் தேய்த்துக் கொண்டாள்.

பிறகு “கடவுள் அனைத்தையும் சரியாக படைத்திருக்கிறார்” என்றாள். எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கு முறையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டாள்.

அனைத்து படைப்புகளுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது மிகச் சிறிய கடுகாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய பலாவாக இருந்தாலும் சரி. அனைத்து படைப்புகளும் அவசியமானதே.



இயற்கையின் அர்த்தங்கள் தெரியவில்லை என்றாலும், அதனை பராமரிப்பதை காட்டிலும், அழிக்காமல் இருப்பதே நல்லது.


"இயற்கையில் தவறாமல் நேரத்தை செலவிடுவது, மன மற்றும் உடல் நலனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையின் கவனச்சிதறல்களில் இருந்து துண்டிக்க, இயற்கையுடன் ஒரு சிறிய நடை  அல்லது குறைவான பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். இயற்கை படைப்புகளின் அமைப்பு, நீரோடையின் சத்தம் அல்லது இலைகளில் பச்சை நிறத்தின் வெவ்வேறு நிழல்கள் போன்ற சிறிய விவரங்களுக்கு கவனம் செலுத்துங்கள். 

இந்த நினைவாற்றலின் பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவும்".

For more: 


Comments

Popular posts from this blog

மறந்துபோன கடிதம்

நம்பிக்கை

ஒரு மாலை உலா