டிஜிட்டல் தனியுரிமை மற்றும் உங்கள் உரிமைகள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் அனைவரும் இணையதளங்களை, சமூக ஊடகங்களை, ஆன்லைன் பரிவர்த்தனைகளை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த சூழலில் டிஜிட்டல் தனியுரிமை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால், பலரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை மேலும் அதை உணர்வதற்கும், பாதுகாப்பதற்கும் சரியான முயற்சி எடுப்பதில்லை.
இதில், டிஜிட்டல் தனியுரிமையின் அடிப்படை, அதை எப்படி பாதுகாக்க வேண்டும், உங்கள் உரிமைகள் என்ன, அவை எப்படி மீறப்படலாம் மற்றும் எதிர்காலத்தை நம்மால் எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைக் காண்போம்.
டிஜிட்டல் தனியுரிமை என்றால் என்ன?
டிஜிட்டல் தனியுரிமை என்பது ஆன்லைனில் நீங்கள் பகிரும் தகவல்களை மற்றவர்கள் எவ்வாறு அணுகுகின்றனர், சேமிக்கின்றனர், பகிர்கின்றனர் என்பதைக் கட்டுப்படுத்தும் உரிமையாகும். இது உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், வங்கி விவரங்கள், இடம், தேடல் பழக்கம், வாங்கும் பழக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது.
உங்கள் தகவல்களை யார் பயன்படுத்துகிறார்கள்?
1) இணையதளங்கள் மற்றும்
செயலிகள்.
2) விளம்பர நிறுவனங்கள்.
3) அரசாங்க அமைப்புகள்.
4) ஹேக்கர்கள் (Hackers) மற்றும் சைபர் குற்றவாளிகள்.
உங்கள் உரிமைகள்:
இந்தியாவில் 2023-ல் நிறைவேற்றப்பட்ட Digital Personal Data Protection Act (DPDP Act) உங்கள் தகவல்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதன் படிநிலைகள் கீழ்வருமாறு:
1) நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் என்னவென்று கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.
2) அந்தத் தகவல்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.
3) உங்கள் தகவல்களை நீக்கக் கோரலாம்.
4) உங்களுக்கு அனுமதி இல்லாமல் பகிரப்படக் கூடாது.
பொதுவாக, தவறாக புரிந்துகொள்ளப்படுவது:
"நான் முக்கியமானவர் இல்லையே, அல்லது பெரிய ஆள் இல்லையே, எனது தகவல்கள் யாருக்கு தேவை?" என்பது தவறு. ஒவ்வொருவருடைய தகவலும் மதிப்புமிக்கது.
"நான் ஒரு செயலியில் என்ன செய்வேன், அதற்கெல்லாம் அனுமதி கேட்டது சும்மாதான்" என்று நினைப்பது அபாயகரமானது. அதுதான் நீங்கள் உங்கள் தகவல்களை நீங்களே அனுமதிக்கும் முதல் கட்டுமாகும். எந்த செயலி எதை கேட்கிறது என்பதை சற்று கவனமாக பார்க்க வேண்டும்.
உங்கள் தகவல்களை எப்படி பாதுகாப்பது:
1. வலுவான கடவுச்சொல் (Strong Password): எளிதாக ஊகிக்க முடியாத கடவுச்சொல் பயன்படுத்துங்கள். ஆனால் பெரும்பாலும் நாம் எளிதான கடவுச்சொல்லைதான் பயன்படுத்துகிறோம். அவ்வாறு எளிதாக கடவுச்சொல்லை பயன்படுத்தும் போது அது அனைத்து நேரத்திலும் பாதுகாப்பாக இருக்காது. முடிந்த அளவிற்கு எப்போதும் வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்த பாருங்கள்.
2. 2-Step Verification: முக்கியமான கணக்குகளில் இந்த அம்சத்தை பாவிக்கவும். இது உங்கள் வலுவான அல்லது எளிதான கடவுச்சொல்லை மீறி உங்கள் தரவுகளை அணுக நேர்ந்தால், இந்த டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. Public Wi-Fi-ஐ தவிர்க்கவும்: பாதுகாப்பற்ற இணைப்புகள் உங்கள் தகவலை திருடச் செய்யும். நாம் செல்லும் பொது இடங்களில் இலவசமாக Wi-Fi கிடைக்குதே என்பதற்காக அதை பயன்படுத்த வேண்டாம் எனில் அதன் மூலமாகவும் உங்கள் தரவுகள் திருடப்படலாம்.
4. Apps-க்கு தேவையான அனுமதிகளையே கொடுக்கவும்: ஒவ்வொரு App-க்கும் நீங்கள் கொடுக்கும் அனுமதியை கவனமாகக் கணிக்கவும். இதுதான் நீங்களே உங்கள் தகவல்களை கொடுப்பதற்கு ஒப்பந்தம் போடும் இடம். எதை பகிர வேண்டும் எதை பகிரக்கூடாது என்று சற்று கவனித்துக் கொடுங்கள்.
5. Browser Extensions & Cookies-ஐ கட்டுப்படுத்தவும்.
6. Anti-virus மற்றும் Firewalls-ஐ பயன்படுத்தவும்.
உண்மை நிகழ்வுகள்:
2020-ல் ஒரு இந்திய வங்கி பயன்படுத்திய ஒரு Third-party App வழியாக 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியின.
2022-ல் ஒரு பிரபலமான கல்வி செயலியில் மாணவர்களின் பெயர், வயது, நகரம் போன்ற விவரங்கள் இணையத்தில் கசியின.
சிந்திக்க வேண்டியவை:
உங்கள் Google கணக்கு கடந்த ஒரு வாரமாக எவ்வளவு செயலியில் உள்நுழைந்திருக்கிறது என தெரியுமா?
Instagram, Facebook, Twitter, linkedin, YouTube போன்ற செயலிகள் உங்கள் தகவல்களை யார் யாருடன் பகிர்கிறார்கள் என்பது தெரிகிறதா?
எதிர்காலம் பற்றிய கண்ணோட்டம்:
AI, IoT, Smart Devices போன்றவை வளர்வதுடன், தனியுரிமை குறைவதற்கான ஆபத்துகள் கூடிக்கொண்டே வருகின்றன. உங்கள் தகவல்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
மேலும்:
டிஜிட்டல் யுகத்தில் தகவல்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன. அதை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், அது நம்மை கட்டுப்படுத்தும். எனவே, உங்கள் டிஜிட்டல் தனியுரிமையைப் பற்றி விழிப்புணர்வு பெறுங்கள், உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பாக செயல்படுங்கள்.
Comments
Post a Comment