ஏன் உங்கள் ஆன்லைன் டேட்டா உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது !

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தகவல்களை எப்படி பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகிறார்கள்?

இன்றைய டிஜிட்டல் உலகில், நம் வாழ்க்கை முழுவதும் இன்றைய இணையத்தில் முழுவதுமாக இணைந்திருக்கிறது. நம் தேடல் வரலாறு, உள்ளமைவு, இடம், ஒருபோதும் நாம் கவனிக்காத நுட்ப தகவல்களே, மற்றவர்களுக்கு பெரும் வாய்ப்புகளாக மாறுகின்றன. இதை எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இனிமேல், உங்கள் ஆன்லைன் வாழ்க்கை ஒரு “உலகளாவிய கண்காணிப்பு மேடை” என்று சொல்லலாம். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள், யாருடன் பேசுகிறீர்கள் – எல்லாம் ஒருபோதும் நீங்களே அறியாத முறையில் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

உங்கள் தகவல் எங்கே போகிறது?

தொலைபேசி செயலிகள் உங்கள் இடத்தையும், தொடர்புகளையும், உங்கள் திறப்பு நேரங்களையும் சேமிக்கின்றன.

வலைத்தளங்கள் உங்கள் கிளிக் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்கின்றன. கிட்டத்தட்ட இதுவும் அடிமைத்தனம் போன்று தான்.

சமூக வலைதளங்கள் உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் பதிவுகளை ஆராய்கின்றன.

உயர்தர விளம்பர நிறுவனங்கள் இவை அனைத்தையும் சந்தைப்படுத்துதல் (marketing) நோக்கில் பயன்படுத்துகின்றன. அனைத்து சமூக ஊடகங்களின் பின்னாலும் பணம் சம்பந்தப்பட்ட நிகழ்வு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தனியுரிமையை எப்படி பாதுகாப்பது?


Permission Settings இதுவே அனைத்துக்கும் மூலதனமாக அமைகிறது – ஒரு செயலிக்கு தேவையில்லாத அனுமதிகளை நீக்குங்கள். அப்படி செய்யும்பொழுது உங்களைப் பற்றிய தகவல்கள் அந்த செயலியில் இருந்து சேமிக்கப்படாது. இதுபோன்ற நீங்கள் பயன்படுத்தும் அனைத்து செயலிகளிலும் (apps) தேவையில்லாத அனுமதிகளை ரத்து செய்யுங்கள்.

Incognito Mode -டில் பயன்படுத்தினான் தேடுதல் யாவும் ப பின்பற்றப்படாது அல்லது பதிவு செய்யப்படாது என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. அவையும் பின்பற்றப்படுகிறது.  Incognito Mode -டும் பாதுகாப்பில்லாத ஒன்றை, ஆனால் தேடுதலில் பின்னால் சில மாற்றங்கள் மட்டும் ஏற்படும் பின்பற்றப்படுதலில்.

Tracker Blockers (uBlock Origin, DuckDuckGo Extension) போன்றவற்றை உபயோகிக்கவும். இது பன்ற சில கூகுள் சேர்ச் எஞ்சின்ஸ் google search engines உள்ளது. இதுபோன்று வேறொரு சர்ச் எஞ்சின் பயன்படுத்துவதால் உங்களையும், உங்கள் தகவல்களையும் கண்காணிப்பதை குறைக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் OTP (One Time Password) என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதிலும் அதிகரித்துள்ள OTP Fraud மற்றும் fake calls-ஐ தவிர்பபது நல்லது. எந்தவிதமான OTP- யாக இருந்தாலும் சரி அதை யாரிடமும் சொல்லக்கூடாது.

வழக்கமான Password updates செய்து கொள்வதும் – 2FA (two factor authentication) இருக்குமாறும் பார்த்துக் கொள்வது நல்லது. இது உங்கள் கட்டமைப்பை இன்னும் அதிகரிக்கும்.

உண்மை சூழ்நிலை:

2025-ல் உலகில் 80% பேர், குறைந்தது ஒரு முறையாவது தங்களுக்கு தெரியாமல் டேட்டா முறைகேடுகளுக்கு இலக்காகியுள்ளனர்.
ஒரு சராசரி இந்தியர், 1 நாளில் 20+ trackers-க்கு தகவல்களை வழங்குகிறார் – இது அவருக்கு தெரியாமலே நடக்கும்.

சிந்திக்க வைக்கும் கேள்வி:

உங்கள் பிரத்தியேக வாழ்க்கையை விற்பதற்குள், யாரிடமாவது அனுமதி கேட்டீர்களா?

"Accept all cookies" சொல்வதற்கு முன், அந்த உணவுக்கு நீங்கள்தான் வேட்டியாகிவிடக்கூடாதா?

புதிய நுட்பங்களில் தனியுரிமை எப்படிப்பட்டது?


இப்போது ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவருகின்றன — ChatGPT போன்று ஏ.ஐ., ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், பேசும் உதவியாளர்கள் போன்றவை. இவை எல்லாமே நம் வாழ்க்கையை சுலபமாக்கினாலும், நம் தனியுரிமைக்கு சவாலாகவும் இருக்கின்றன. 

உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் டிவி கூட உங்கள் பழக்கங்களை சேகரிக்க முடியும். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பொழுது, அதன் பாதுகாப்பு நிபந்தனைகள், அனுமதி அம்சங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வும் அவசியம்.

மேலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை:

டிஜிட்டல் வாழ்க்கை தவிர்க்க முடியாதது. ஆனால் அதைப் பாதுகாப்பது மட்டும் உங்கள் பொறுப்பு. உங்கள் தனியுரிமையை மதியுங்கள் – ஏன் அதுதான் உங்கள் சமூக ஊடகங்களின் அடையாளமாகவும் உள்ளது. அதை யாருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டாம்.

உங்கள் டேட்டா ( PERSONAL DATA)என்பது வெறும் இலவசமாக கிடைக்கும் ஒன்றல்ல – அது உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு சமூக ஊடகத்தில்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன கடிதம்

நம்பிக்கை

டயல் பேட் மாற்றம் – பழைய மாறி dail pad கொண்டு வருவது எப்படி!