இந்திய கிராமங்களில் வளர்ந்து வரும் சிறு வணிகங்கள்
இந்தியாவின் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இங்கு வாழும் மக்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் நகர வாழ்க்கையின் ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இருப்பர். அதனால், கிராமப்புறங்களில் சிறு வணிகங்கள் வளர்ச்சி பெறுவது மிக அவசியம். 
இவை உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் உதவுகின்றன.
கிராமப்புற சிறு வணிகங்களின் வகைகள்:
1. ஆர்கானிக் விவசாயம்,
நவீன ஆரோக்கிய உணவுக்கான தேவை அதிகரித்ததால், கிராமங்களில் ஆர்கானிக் விவசாயம் வளர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதியியல் உரங்கள் மற்றும் ரசாயனங்களிலிருந்து தப்பி இயற்கை முறையில் பயிர்களை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால்தான் இப்போதைய நாட்களில் ப்யூர் ஆர்கானிக் ஃபுட் மிகவும் வளர்ந்து வருகிறது.
2. கைவினை தொழில்,
கிராமப்புறங்களில் பாரம்பரிய கைவினை பொருட்கள், துணி வேலை மற்றும் மரச்செதுக்கள் போன்றவை உள்ளூர் மற்றும் நகர சந்தைகளில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இது பெண்கள் மற்றும் இளம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு சிறிதளவே முன்னெடுப்பும், அதிகபட்ச ஆர்வம் வேண்டும்.
3. மாட்டுப் பண்ணை மற்றும் பால்தொழில், மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி கிராமங்களின் முக்கிய ஆதாய வழிகளாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் உண்டாகிறது. இது ஆரம்ப காலகட்டத்திலே இருந்து வருகிறது, இதை தொடங்குவதற்கு வழி முறையே தேவையில்லை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே (சிறிதளவில் என்றால்).
4. கோழி வளர்ப்பு,
கோழி வளர்ப்பு தொழில் சிறு முதலீட்டில் கூட நல்ல வருமானம் தரும் தொழிலாக உருவெடுத்து வருகிறது. இந்த தொழிலில் லட்சக்கணக்கான மக்கள் லாபம் அடைந்திருக்கின்றனர். இந்த வகையான தொழிலுக்கு, நாள் முழுக்கவோ அல்லது நாளுக்கு அடிக்கடியோ கோழிகளை பாதுகாப்பது மிக முக்கியம். அதைவிட மிக முக்கியமானது கோழிகளுக்கு கொடுக்கக்கூடிய உணவு.
5. பிற சிறு தொழில்கள்,
மூலிகை வகைகள் சேகரிப்பு, நார் தயாரிப்பு, எலக்ட்ரானிக் சாதன பழுது பார்ப்பு போன்ற தொழில்களும் கிராமங்களில் வேகமாக பரவி வருகின்றன. 
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து தொழில்களும் புதிதல்ல, காலம் காலமாக இருந்த ஒன்றுதான். இப்போது அதனுடைய மதிப்பு கூடுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறு வணிகங்களின் முக்கியத்துவம்:
பொருளாதார முன்னேற்றம்: கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து, தன்னிறைவு மற்றும் சமுதாய வளர்ச்சி ஏற்படும்.
எல்லையில்லா வளர்ச்சி: நகரங்களுக்குப் பதிலாக கிராமப்புறங்களின் வளர்ச்சி முன்னிறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இயற்கை முறைகளைப் பின்பற்றும் தொழில்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும்.
புதிய தலைமுறைக்கு உத்வேகம்: இளம் மக்கள் தங்கள் ஊரையே வளர்த்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசு மற்றும் தனியார் உதவிகள்
இந்திய அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்கள் கிராமப்புற சிறு வணிகங்களுக்கு நிதி, பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் கிராம மக்களின் வாழ்கைத் தரம் மேம்படும்.
சிறு வணிகங்களை ஆரம்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
சரியான திட்டமிடல்: வணிகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்படுவது அவசியம். சந்தை ஆய்வு, முதலீடு திட்டம், பொருள் வசதி ஆகியவை திட்டமிடல் செய்யப்பட வேண்டும்.
தொழில்நுட்ப பயன்பாடு: நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். இது உற்பத்தி திறன் மற்றும் விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
புகைப்படம் மற்றும் மார்க்கெட்டிங்: கிராமப் பொருட்களை நகர சந்தைகளிலும் ஆன்லைனிலும் விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் திறன் வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியம்.
கூட்டுறவு அமைப்புகள்: ஒரே தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி சக்தி சேர்க்க வேண்டும். இது பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்ய உதவும்.
கிராமப்புற வளர்ச்சிக்கான சமூக பங்கு:
கிராம மக்கள் மற்றும் சமூக அமைப்புகளும் சிறு வணிக வளர்ச்சிக்காக பங்களிக்க வேண்டும். வணிக வளர்ச்சியில் சமூக ஒத்துழைப்பு, கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இறுதி வார்த்தைகள்:
கிராமப்புற சிறு வணிகங்கள் இந்திய பொருளாதாரத்தின் அங்கமாகும் மிக முக்கியமான பகுதி. இவற்றை ஊக்குவித்து, வளர்க்க நாம் அனைவரும் முயல வேண்டும். இது நாட்டின் மொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
 
Comments
Post a Comment