"நீ செலவிட்ட நேரம்"

அன்று ஒரு விடுமுறை நாள், தன் மகனை விளையாட வைப்பதற்காக, ஒரு தந்தை தன் மகனை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வந்தார். அவர் தன் மகனிடம், ஜோ, பார்த்து கவனமாக விளையாட வேண்டும், என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு கல்மேசையின் மீது அமர்ந்தார். அவன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, தன் அப்பாவிடம் வந்து, அப்பா, நாம் பதநீர் அருந்த செல்வோமா ? என்று கேட்டான். அவன் தந்தையும் சரி என பதில் அளித்தார்.பின்பு பதநீர் அருந்தியவுடன், அப்பா, கோவிலுக்கு செல்வோமா? என்று கேட்டான். அதற்கும் அவர் தந்தை சரி என பதில் அளித்தார். கோவிலில் ஜெபித்து விட்டு வெளியே வரும் பொழுது, அப்பா, கடல் கரையோரம் சிறிது நேரம் நடப்போமா? என்று கேட்டான். அதற்கும் அவன் தந்தை சிரித்துக்கொண்டே தலையாட்டினார். பிறகு வீட்டிற்கு வரும் பொழுது, இவ்ளோ நேரம் எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்? என தன் அம்மா கேட்க, தான் சுற்றி வந்த அனைத்து இடங்களையும் தன் அம்மாவிடம் சொன்னான். பிறகு அவள் தன் கணவரிடம், எதற்காக இவ்வளவு நேரம் வெளியே செலவிட்டீர்கள்? என்று கேட்டாள். அதற்கு அவளின் கணவன், நான், நம் மகன் வயதில் இருக்கும் ...