திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி அறியாத அதிசய உண்மைகள்!
திருத்தந்தை பிரான்சிஸ் (1936–2025), உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர். இவரது இயற்பெயர் ஹோர்ஹே மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario Bergoglio). எளிமை, கருணை மற்றும் முற்போக்கான சிந்தனைகளுக்காக பிரபலமான இவர்,21 ஏப்ரல் 2025-ல் மரணமடைந்தார். இருப்பினும், அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் இன்றும் பலரை ஈர்க்கின்றன. இந்த பதிவில், திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய அரிய மற்றும் அறியப்படாத உண்மைகளை தெரிந்து கொள்வோம். 1. பாதிரியாக முன்பு, நைட் கிளப் பணியாளராக இருந்தவர். இளம் வயதில், ஹோர்ஹே பெர்கோக்லியோ அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் பணியாளராக (Bouncer) வேலை செய்துள்ளார். வேதியியல் படிக்கும் போது தன்னை நிர்வகிக்க இந்த வேலையை செய்தார். இந்த அனுபவம் பின்னர் பலரோடும் நன்றாக பழகும் திறனை அவருக்கு கொடுத்தது. 2. ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளவர். 21 வயதில், பெர்கோக்லியோவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது . இருப்பினும், இந்த உடல்நிலை பிரச்சினை அவரது பணியை எப்போதும் தடுக்கவில்லை. 3. ச...